Join THAMIZHKADAL WhatsApp Groups
பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பொதுத் துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.
பணியின் முழு விவரம் இதோ...
பணியின் பெயர் | ப்ரோபேஷனரி ஆபீசர் |
காலியிடங்கள் | 3049 |
இடஒதுக்கீடு | பொதுப் பிரிவினருக்கு 1224 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 829 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 300 இடங்களும் , 462 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 234 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன |
கல்வித் தகுதி | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். |
வயது வரம்பு: | இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2023 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். |
எஸ்பிஐ ப்ரோபேஷனரி ஆபீசர் தெரிவு முறை | முதல் நிலைத்தேர்வு(Written), முதன்மைத் தேர்வு(Main Examination), நேர்காணல் (Interview) |
தேர்வுக்கான தேதிகள் | முதல் நிலைத் தேர்வானது செப்டமபர்/ அக்டோபர் மாதத்திலும், முதன்மைத் தேர்வானது 2023 நவம்பர் மாதத்திலும் அன்றும், நேர்காணலுக்கான அழைப்பு 2024 ஜனவரி/பிப்ரவரி மாதத்திலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
சம்பளம் | ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ. 41,960/ வரை பெறலாம் |
விண்ணப்பக் கட்டணம் | ரூ .750/- பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. |
விண்ணப்பம் செய்வது எப்படி?
எப்படி விண்ணப்பிப்பது: முதலில்ibps.in என்கிற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் செல்ல வேண்டும்.
"Click here to apply online for COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS IN PARTICIPATING BANKS (CRP SPL-XIII) " என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
அடுத்து நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
பிறகு விண்ணப்பப் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, அந்த பக்கத்தை சமர்ப்பிக்கவும்.
எதிர்கால பயன்பாட்டிற்காக இந்த படிவத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்.
No comments:
Post a Comment