பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பொதுத் துறைகளில் காலியாக உள்ள புரொபேஷனரி அதிகாரிகள்/ மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்கள் (Probationary Officer/ Management Trainee posts) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.
காலியிடங்கள் – 3049
இடஒதுக்கீடு – பொதுப் பிரிவினருக்கு 1224 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 829 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 300 இடங்களும் , 462 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 234 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி – ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு – இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.08.2023 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
No comments:
Post a Comment