Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 5, 2023

ஆகஸ்ட் 31-க்குள் இது கட்டாயம்... முக்கிய வங்கி அறிவிப்பு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
உங்களிடம் வங்கி கணக்கு உள்ளதா? ஆனால் இதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சனை ஏற்படும்.

பொதுத்துறை வங்கிகளில் முன்னணியில் இருந்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. KYC-ஐ முடிக்கும்படி தனது வாடிக்கையாளர்களை அது வலியுறுத்துகிறது. எனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தப் பணியை உடனடியாக முடிப்பது நல்லது. இல்லையெனில் வங்கி கணக்கு வேலை செய்யாமல் கூட போகலாம்.

வங்கி வாடிக்கையாளர்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் KYC-ஐ முடிக்க வேண்டும் என்று PNB தெரிவித்துள்ளது. RBI விதிமுறைகளின்படி KYC முடிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த KYC அப்டேட் அனைவருக்கும் பொருந்தாது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். எனவே அனைவரும் கவலைப்படத் தேவையில்லை.

குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் KYC இணைக்கும்படி வங்கி தெரிவிக்கிறது. வாடிக்கையாளர்கள் இதைப் பற்றி மொபைலுக்கு எஸ்எம்எஸ் பெறுவார்கள். மேலும், KYC இணைக்கும்படி செய்யும்படி கடிதங்களும் வரும். ஈமெயில், எஸ்எம்எஸ் கூட வந்திருக்கலாம். அவர்கள் அனைவரும் KYC செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களது வங்கி கணக்கு முடக்கப்படும்.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் KYC அப்டேட் கட்டாயம் என்று வங்கி தெரிவித்துள்ளது. உங்கள் கணக்கு KYCed செய்யப்பட வேண்டும் என்றால், உடனடியாக அதை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பணியை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். எனவே வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்குச் சென்று கேஒய்சியை முடிக்கலாம். முகவரிச் சான்று, அடையாளச் சான்று, புகைப்படம், பான் கார்டு போன்ற ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். KYC-ஐ புதுப்பித்தவர்கள் PNB செயலி மூலம் நிலையை சரிபார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News