Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 8, 2023

3,359 இரண்டாம் நிலை காவலா்களை தேர்வு செய்ய அறிவிப்பு: ஆக.18 முதல் விண்ணப்பிக்கலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 3,359 இரண்டாம் நிலை காவலா் காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஆக. 18-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியம் மூலம் இளைஞா்கள் தேர்வு செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக தமிழக காவல் துறையில் தற்போது காலியாக உள்ள 3,359 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தவுள்ளதாக அந்த வாரியம் திங்கள்கிழமை அறிவிப்பை வெளியிட்டது. இதில் 783 பெண்களும், 2,576 இளைஞா்களும் அடங்குவா். மொத்தப் பணியிடங்களில் 2,599 காலி இடங்கள் காவல் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் 780 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைத் துறையில் 3 பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சிறைத் துறையில் மொத்தம் 86 காலிப் பணியிடங்களும், தீயணைப்புத் துறைக்கு 674 காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன. காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட 2,599 பணியிடங்களில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படைக்கு 1,819 பேரும், மாநகர, மாவட்ட ஆயுதப்படைக்கு 780 பேரும் தேர்வு செய்யப்படுகின்றனா்.

ஆயுதப்படைக்கு ஒதுக்கப்பட்ட 780 பணியிடங்கள் அனைத்தும் இளம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இட ஒதுக்கீடு விகிதம்: மொத்தப் பணியிடங்களில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவா்களுக்கு 10 சதவீதமும், வாரிசுதாரா்களுக்கு 10 சதவீதமும், முன்னாள் ராணுவத்தினருக்கு 5 சதவீதமும், ஆதரவற்ற விதவைகளுக்கு 3 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், அரசு விதிகளின்படி வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்படும். இந்தத் தேர்வுக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்வச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க, கடந்த ஜூலை 1-ஆம் தேதிக்குள் குறைந்தபட்சம் 18 வயது பூா்த்தி பெற்றவராக இருக்க வேண்டும். வயது உச்சவரம்பு அதிகபட்சம் 26 வயதுக்குள்பட்டவராக இருத்தல் அவசியம். அதேவேளையில் இட ஒதுக்கீடு அடிப்படையில், வயது உச்சவரம்பு விலக்கு அளிக்கப்படும். இந்த காவலா் தேர்வுக்கு ஆக.

18 முதல் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். செப். 17-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எழுத்துத் தேர்வுக்கான தேதி பின்னா் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத் தேர்வில் பங்கேற்க இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News