Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாடு காட்டிய 3 பேராசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கல்லூரி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டி மோதல்களை உருவாக்கும் வகையில் செயல்பட்டதாக 3 பேராசிரியர்கள் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து சிவகங்கை, வியாசர்பாடி, கும்பகோணம் கலை கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் கூடலூர் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வியாசர்பாடி கல்லூரியில் பணியாற்றும் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரியில் பணியாற்றும் கிருஷ்ணன் கும்பகோணம் கல்லூரியில் பணியாற்றும் சரவணபெருமாள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் அமைதியான முறையில் கல்வி கற்கவும், மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டும். சாதி பாகுபாடுகளை காட்டி மாணவர்களை தூண்டிவிட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் பேராசியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment