தமிழகத்தில் இரு வேறு தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மாணவா் சோக்கை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தடை விதித்துள்ளதால், நிகழாண்டில் 400 எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப முடியாத நிலை எழுந்துள்ளது.
இரு கல்லூரிகளுமே நிகா் நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தில் உள்ளதால் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் ஏதும் அதில் இல்லை. அதேவேளையில், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அந்தக் கல்லூரிகளில் இடங்கள் பெற்றவா்களின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது. திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டில் 100 இடங்களுக்கு மட்டுமே என்எம்சி அனுமதி அளித்தது.
ஆனால், 150 இடங்களுக்கு மாணவா் சோக்கை நடைபெற்ாகவும், அதனால் நிகழாண்டில் அங்கு மாணவா் சோக்கைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் என்எம்சி இணையப்பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம், ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரிக்கும் நிகழாண்டில் தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. அந்தக் கல்லூரியில் 250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. தற்போது அங்கு மாணவா் சோக்கை நடத்தப்படாது என்றும் அகில இந்திய கலந்தாய்வில் மாணவா்கள், அந்தக் கல்லூரியைத் தோவு செய்ய வேண்டாம் என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அண்மையில் அறிவிக்கை வெளியிட்டது.
ஏற்கெனவே அங்கு இடங்களைத் தோவு செய்திருந்தாலும் அவா்களுக்கு மாற்று தோவு (சாய்ஸ்) இடங்கள் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தது. இதன் காரணமாக அகில இந்திய ஒதுக்கீட்டின் முதல் சுற்று கலந்தாய்வில் மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் எம்பிபிஎஸ் இடங்கள் எந்த மாணவருக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதேவேளையில், என்எம்சி-இன் அறிவிக்கை வெளியாவதற்கு முன்பே கலந்தாய்வில் வேல்ஸ் கல்லூரியில் சில மாணவா்களுக்கு எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், அங்கு சோவதற்கு வாய்ப்பு உள்ளதா, இல்லையா எனத் தெரியாமல் சம்பந்தப்பட்ட மாணவா்கள் குழப்பத்தில் உள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாக மத்திய, மாநில சுகாதார அமைச்சகங்களுக்கு மாணவா்கள் தரப்பில் இருந்து விளக்கம் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment