Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 11, 2023

50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் இளமையாக இருக்க 'இந்த' உடற்பயிற்சிகளை செய்யலாம்!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நமக்கு வயதாகிறது என்பதால் பலவீனமாகிவிட்டோம் என்று அர்த்தம் கிடையாது. எத்தனை வயதானாலும் அதற்கு ஏற்றார் போல உடறபயிற்சி மற்றும் உணவு முறைகளை மாற்றிகொண்டால், நாமும் நலமுடன் நீண்ட நாள் வாழலாம்.

இதனால் பல நோய்களையும் தடுக்க முடியும்.

வயதானவர்கள் உடற்பயிற்சி செய்யலாமா..?

50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் சிலர், தங்கள் இளமையை பாதுகாக்கவும் வயது சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கவும் உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். வயது ஆக ஆக, எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு இருப்பதை தவிர்க்க வேண்டும். அமெரிக்காவில் இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வயதானவர்கள் உடற்பயிற்சி செய்வதால் அவர்களால் உடலில் ஆற்றலை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும், வயது சம்பந்தமான பிரச்சனைகளான இதயக்கோளாறு, உடல் பருமன் போன்ற விஷயங்களை தவிர்க்க முடியும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஒரு சில உடற்பயிற்சிகளை மட்டுமே அவர்களால் மேற்கொள்ள முடியுமாம். அவை என்னென்ன உடற்பயிற்சிகள்? வாங்க பார்க்கலாம்.

சைக்கிள் மிதிப்பது:

சிறுவயதில் இருந்தே நம்மில் பலர் சைக்கிள் ஓட்ட பழகியிருப்போம். வயதான பின்பு சைக்கிள் மிதிக்கவே மறந்திருப்போம். 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் சைக்கிள் மிதித்தால் அவர்களின் தசையில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்று சில மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உடற்பயிற்சி கூடங்களிலும் ஃபேன் பைக் என்ற உடற்பயிற்சி சாதனம் இருக்கிறது. இதை 30 விநாடிகளுக்கு நன்கு மிதித்த்து விட்டு, 30 விநாடிகளுக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும். இப்படியே 10 நிமிடங்களுக்கு செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி:

நடைப்பயிற்சிமேற்கொள்ள வயது ஒரு தடையல்ல. எவ்வளவு வேகமாக நடக்க வேண்டும், எவ்வளவு மெதுவாக நடக்க வேண்டும், எவ்வளவு விரைவாக நடக்க வேண்டும் என்பது நம்மிடம்தான் இருக்கும். எனவே, 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மாலை அல்லது காலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் கண்டிப்பாக உடலை இளமையாக வைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் சில உடற்பயிற்சி நிபுணர்கள்.

ஸ்குவாட்:

நம் தமிழ்நாட்டில் இந்த உடற்பயிற்சியை தோப்புக்கரணம் போடுவது என்பர். ஸ்குவாட் உடற்பயிற்சி நம் கால், முட்டி மற்றும் பின்பகுதிக்கு வலு தரும் உடற்பயிற்சிகளுள் ஒன்று. இது, உடலில் உள்ள ஹார்மோன்கள் சிலவற்றை சீர்படுத்தவும் உதவும். உடல் எடையை இழக்க விரும்புவோர், வயதானவர்கள் என பலரும் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புஷ் அப்:

புஷ் அப் வகையான உடற்பயிற்சிகள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் இளமையாக வைத்திருக்கவும் பல வகைகளில் உதவும். இது, நமது தோள்பட்டை பகுதி மற்றும் கை, முழு உடல் ஆகியவற்றுடன் இணைந்த ஒரு உடற்பயிற்சி ஆகும். இடுப்பு பகுதியை வலுப்படுத்தவும் இந்த பயிற்சி உதவும்.

லஞ்சஸ் வகையிலான உடற்பயிற்சிகள்:

உடலின் கீழ் பகுதியை ஆக்டிவாக வைத்திருக்க உதவும் பயிற்சி இது. சரியான எடையை பாலன்ஸ் செய்வதற்கு, உடல் எடையை ஏற விடாமல் பார்த்துக்கொள்வதற்கு என பல விதமான முயற்சிகளுக்கு இப்பயிற்சி உதவும். தசையை வளர்ப்பதற்கும், முதுகு வலி சரியாவதற்கும் பலர் இந்த வகையிலான உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

நீச்சல்:

நீச்சல் தெரிந்தவர்கள் எந்த வயதில் வேண்டுமானாலும் நீச்சல் அடிக்கலாம். இது, மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும். சிறந்த மூச்சுப்பயிற்சிக்கும் நீச்சல் துணை புரியும். இதனால் மனதும் உடலும் அமைதிப்பெற்று புத்துணர்ச்சி கிடைக்கும் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News