Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 26, 2023

சனி யோகம் இன்று தொடங்குகிறது.. 5 ராசிக்காரர்களுக்கு உச்சயோகம்

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். சனி கொடுப்பது எவரும் தடுக்க முடியாது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான்.

நன்மைகள் செய்தால் நன்மைகள் கொடுப்பார், தீமை செய்தால் தீமைகளை இரட்டிப்பாக கொடுப்பார்.

சனி பகவான் நற்பலன்களை கொடுக்க ஆரம்பித்து விட்டால் யாரும் தடுக்க முடியாத அளவிற்கு அளவில்லா செல்வங்களை அள்ளிக் கொடுப்பார். அதே சமயம் கொடூர பார்வையால் சிக்கல்களை கொடுக்க நினைத்தால் தாங்க முடியாத அளவிற்கு இருக்கும்.

சனிக்கிழமை அன்று தனுசு ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். இதன் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் சனி பகவான் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார் என கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.

கன்னி ராசி

சனி பகவான் உங்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித் தரப் போகிறார். சனிக்கிழமை அன்று சனி பகவானின் முழுமையான அருள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய தொழில் முன்னேற்றங்களை தரும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். இன்று செய்யும் காரியங்கள் பின்னாளில் அதிக பலன்களை கொடுக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு உண்டாகும். தடைபட்டு கிடந்த வேலைகள் அனைத்தும் நடக்கும்.

தனுசு ராசி

சனி பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான அதிர்ஷ்டங்களை அள்ளித் தரப் போகிறார். நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். திருமண சிக்கல்வில் விளக்கும். வருமானம் அதிகரிக்கும் செலவுகள் குறையும். பழைய முதலீடுகள் இப்போது பெரிய வெற்றியை தரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி

சனிக்கிழமை அன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமைய உள்ளது. இந்த தொடங்கும் அனைத்து செயல்களையும் சனி பகவான் நன்மையாக முடித்து தருவார். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களை சுற்றி உள்ள சிக்கல்கள் விலகும். குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

கும்ப ராசி

சனி பகவான் உங்களுக்கு நல்ல செய்தியை தேடி தருவார். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. மகிழ்ச்சியான தருணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் விலகும். தொடர்ந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து விடும்.

விருச்சிக ராசி

சனி பகவானின் யோகத்தால் நீங்கள் அதிக லாபத்தை பெறப்போகின்றீர்கள். உங்களுடைய பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். திருமணமாகா தவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். புதிய உறவுகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News