Join THAMIZHKADAL WhatsApp Groups
சூரியன் பகவான் ஒவ்வொரு ராசியிலும் பெயர்ச்சி அடையும் பொழுது அது தமிழ் மாதங்களின் தொடக்கமாக கருதப்படுகிறது.
சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய சூரிய பகவான் அந்த ராசிக்கு ஆவணி மாதம் ஆகஸ்டு 18ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார்.
சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது மற்ற ராசிகளுக்கு பல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகளுக்கு என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசி
ஐந்தாம் வீட்டின் அதிபதியாக விளங்கக்கூடிய சூரிய பகவான் சுந்தர் ராசியில் பயணம் செய்வதால் குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நட்புறவு அதிகரிக்கும். குழந்தைகள் கல்வியில் சிறப்பாக விளங்குவார்கள். பணவரவில் இந்த குறையும் இருக்காது. கடினமான உழைப்பு மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும்.
மிதுன ராசி
உங்கள் ராசியின் மூன்றாவது வீட்டின் அதிபதியாக விளங்கக்கூடிய சூரிய பகவான் உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். எல்லா செயல்களிலும் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். அதிகாரம் மற்றும் ஆற்றல் மிக்கவராக இருப்பீர்கள். வேலையில் சிறந்து விளங்க கூடியவர்களாக இருப்பீர்கள். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
கடக ராசி
உங்கள் ராசியில் சூரிய பகவான் குடும்பஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் அதிர்ஷ்டம் உங்களை தேடி வர போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சில மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் முன்னேற்றத்திற்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
துலாம் ராசி
உங்கள் ராசியின் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளதால் அதிர்ஷ்டத்திற்கு எந்த குறையும் இருக்காது. பண வரவு இருக்கும். சொத்து சிக்கல்கள் விலகும். வருமானம் அதிகரிக்கும். அங்கீகாரங்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.
விருச்சிக ராசி
உங்கள் ராசியின் பத்தாம் வீடான தொழில் மற்றும் தர்ம ஸ்தானத்தில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்ய உள்ளார். சிறப்பான பலன்களுக்கு எந்த குறையும் இருக்காது. வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் இரட்டிப்பாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அரசியலில் உள்ளவர்களுக்கு உங்களது அதிகாரம் நிரந்தரமாகும். தலைமை பண்பு தானாகவே உங்களை தேடி வரும். குடும்பத்தில் உங்களது மதிப்பு உயரும். எதிர்காலம் சிறப்பானதாக மாறும்.
No comments:
Post a Comment