Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 27, 2023

Aided School ல் பணியாற்றி அரசுப் பள்ளியில் பணியேற்றவர்கள் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற முடியுமா?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி அரசுப் பள்ளியில் பணியேற்றவர்கள் அரசின் நிதி உதவி பெறும் பள்ளியில் பெற்ற ஊதியத்தை அரசுப் பள்ளியில் பெற முடியும் . - ஆ. மிகாவேல் ஆசிரியர் மணப்பாறை

* பணி சார்ந்த வழக்குகளில் சாதமான , சாதகமற்றவைகள் மிகவும் அவசியம் .* சுரேஷ் வழக்கின் இரு நபர் அமர்வு தீர்ப்பின் படி ஒருவர் ஒரு பணியிலிருந்து வேறு பணிக்கு TNPSC உட்பட வேறு தேர்வு முகமை புதிய நியமனம் பெறும் போது ஊதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது .

* ராஜேஸ்வரி வழக்கின் இரு நபர் அமர்வு தீர்ப்பு , உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ஒருவர் ஒரு பணியிலிருந்து வேறு பணிக்கு TNPSC உட்பட வேறு தேர்வு முகமை புதிய நியமனம் பெறும் போது ஊதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .

* ரூபஸ் டேவிட் வழக்கின் உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறை ஆணை பிறப்பித்துள்ளார்கள்

* சுதா வழக்கின் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு தொடக்கக் கல்வி இயக்குநர் வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்கள்.

* மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கிய சுற்றறிக்கையில் Technical resignation மூலம் ஒரு பணியிலிருந்து வேறு Uணிக்கு நியமனம் பெறும் போது , ஊழியர்களின் உழைப்பை அங்கிகரிக்கும் விதமாக ஊதிய பாதுகாப்பு வழங்குமாறும் , ஊதியப் பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு பெருமை கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

ஆ. மிகாவேல் ஆசிரியர்
மணப்பாறை
9047191706

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News