Join THAMIZHKADAL WhatsApp Groups
மூலிகைகள் என்றாலே அதில் நிறைய ஆரோக்கிய நலன்கள் அடங்கியிருக்கும். அதுபோன்ற அற்புத கடவுள் குடுத்த அந்த மருந்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் பாருங்க
பட்டையின் சிறப்பு என்னவெனில், இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பதே ஆகும். இலவங்கப்பட்டை வீட்டு மருந்தாக மட்டுமின்றி அழகை மேம்படுத்த உதவுவதிலும் நல்ல பயன் தருகிறது.
எந்த ஒரு நற்குணம் வாய்ந்த மருந்தாக இருந்தாலும், அதை மருத்துவ நிபுணர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் உட்கொள்வது தவறு. அதில் இருந்து இலவங்கப் பட்டை வேறுப்பட்டதல்ல. ஒருவேளை சிலர் ஏதேனும் மருந்துகள் உட்கொண்டு வருபவர்களாக இருந்தால்.
இலவங்கப் பட்டையை உட்கொள்வதை, உங்களது மருத்துவ ஆலோசகரிடம் பரிசீலித்தப் பின்பு எடுத்துக் கொள்வது நல்லது.
நன்மைகள்
இரத்த சர்க்கரை
இரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைக்க இலங்கைப் பட்டை வெகுவாக பயனளிக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் டைப் 2 சர்க்கரை உள்ளவர்களுக்கு இது நல்ல பயன் தருகிறது.
புற்றுநோய் வராமல் தடுக்கிறது
புற்றுநோய் கட்டி உருவாகாமல் இருக்க இலவங்கப் பட்டை நல்ல முறையில் பயன் தருகிறது. சில மருத்துவ ஆராய்ச்சிகளின் மூலம் நாம் அறிவது என்னவெனில் இது சில வகையான புற்றுநோய்கள் நம்மை தாக்காது இருக்க உதவுகிறது.
உஷார்நிலை
இலவங்கப் பட்டை கலந்த தேநீர் பருகும் போது உங்கள் உடல் நல்ல ஆரோக்கியத்துடனும் விழிப்புடனும் செயல்படுகிறது. இதனால் நீங்கள் உங்களது அலுவலகத்தில் சோர்வு ஏற்படாமல் நன்றாக வேலை செய்ய முடியும்.
உடல் எடை
இலவங்கப்பட்டை நமது இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. மேலும் நமது உடல் பருமனை கட்டுப்படுத்தி உடல் எடை கூடாமல் தடுக்கிறது.
மன அழுத்தம்
இலவங்கப்பட்டை எண்ணெயின் நறுமணம் நமது கவலையை போக்கி, நமது மனநிலையை மேலோங்க செய்ய உதவுவதாய் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment