Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 1, 2023

உடல் எடையை குறைக்க இந்த முத்திரையைச் செய்ய தொடங்கினால் போதும்..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

இந்த முத்திரை பெயர் சூரிய முத்திரை ஆகும். இது உடலில் உள்ள திடக்கழிவுகளை எரித்து கொழுப்பு தன்மை ஏற்படாமல் பாதுக்காக்கிறது.

மேலும் சோர்வை போக்கி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. இந்த முத்திரையை செய்யும் போது உடலின் வெப்ப நிலை அதிகரித்து பசியைத் தூண்டும். செரிமானத்துக்கு உதவும். உடலில் அதிக கொழுப்பு உடையவர்கள் இந்த முத்திரையைச் செய்யத் தொடங்கிய ஒரு மாதத்தில் கெட்ட கொழுப்பு குறையத் தொடங்கும். இதன்மூலம் உடல் எடையும் குறையும்.

செய்முறை :

சப்பளங்கால் இட்டு 5 - 10 நிமிடங்கள்வரை இந்த முத்திரையை செய்ய வேண்டும். தினமும் இருவேளை வெறும் வயிற்றில் செய்வது சிறந்த பலனைத் தரும். முத்திரையை செய்யும் முன் அருகில் ஒரு டம்ளரில் தண்ணீரை எடுத்து வைத்த பின் முத்திரை செய்யலாம். முதலாவது மோதிர விரலை மடக்கி, உள்ளங்கையின் நடுவில் தொடவேண்டும். கட்டை விரலால் மோதிர விரலை மிதமாக அழுத்த வேண்டும். மற்ற மூன்று விரல்கள் நீட்டி வைத்திருக்க வேண்டும். இந்த முத்திரையை முடித்த பின் எடுத்து வைத்திருக்கும் தண்ணீரைக் மறக்காமல் அருந்துக்கள்.

குறிப்பு : நீர்த்தன்மை குறைந்தவர்கள், கருவளையம், ஒல்லியான உடல், படபடப்பு, உடல் உஷ்ணம், ஹைப்பர்தைராய்டு, கல்லடைப்பு, நீர்கடுப்பு, வாய்புண், வெள்ளைபடுதல், கண்சிவப்பு, ஒற்றைத் தலைவலி ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் இந்த முத்திரையை செய்வதை தவிர்த்து விடுங்கள் .

சூரிய முத்திரையினால் ஏற்படும் பயன்கள்:உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.

உடல் பருமன் குறைந்து உடல் எடை குறையும்.

ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கலை போக்கும்.

தைராய்டு நோயை நீக்கும்.

தடுமன், தலைவலி, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

உடல் குளிர்ந்து போவதையும், குளிர் காய்ச்சலை போக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News