Join THAMIZHKADAL WhatsApp Groups
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 29, 30 ஆம் தேதிகளில் மூன்றாவது நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2023 - 24 ஆம் ஆண்டுக்கான இளம் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோக்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுப் பிரிவினருக்கு தனியாா் கல்லூரிகளில் காலியாக உள்ள 500 இடங்களுக்கு மூன்றாவது நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது.
இந்தக் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 29), புதன்கிழமைகளில் காலை 8 மணி முதல் மாலை வரை பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இணையதளத்தில் வெளியிடப் பட்டிருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment