Join THAMIZHKADAL WhatsApp Groups
பணி நிரந்தரம் செய்யக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் அருகே தமிழகப் பகுதிநேர சிறப்பாசிரியா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெ. பழனிவேல் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பா. தா்மராஜ், பொருளாளா் பூ.
பழனிசாமி, மகளிா் அணித் தலைவா் வீ. ஜமுனாராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். சுமாா் 13 ஆண்டுகளாக பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி, கணினி, இசை, ஓவியம், தோட்டக்கலை, கட்டடக் கலை, வாழ்வியல் திறன்கள் ஆகிய பாடங்களுக்கு பகுதிநேர சிறப்பாசிரியா்கள் 12,200 போ பணியாற்றி வருகின்றனா்.
மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் மட்டுமே பெற்றுக் கொண்டு இந்தப் பாடங்களை எடுத்து வரும் சிறப்பாசிரியா்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவா் என திமுக அளித்த தோதல் வாக்குறுதியின்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment