Join THAMIZHKADAL WhatsApp Groups
எண்ணும் எழுத்தும் திட்டம் அனைத்துப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சென்றடைந்தது குறித்து மூன்றாம் நபர் மதிப்பீடு ( Third Party evaluation ) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் , இம்மதிப்பீட்டினை மேற்கொள்ள அரசு , அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வியியல் ( B.Ed. ) கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளதால் அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வியியல் ஆண்டு ( B.Ed ) கல்லூரிகளில் பயிலும் முதலாம் மற்றும் இரண்டாம் மாணவர்களை Third Party evaluation பணியில் மதிப்பீட்டாளராக ( Enumerators ) செயல்பட அனுமதி வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் , இம்மாணவர்களுக்கு மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கான பயிற்சி அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 28.08.2023 முதல் 31.08.2023 வரை இரண்டு பிரிவுகளாக நடைபெறவுள்ளது. பள்ளிகளில் Field investigation பணியானது 01.09.2023 முதல் 15.09.2023 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே மேற்காண் தேதிகளில் அரசு , அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வியியல் ( B.Ed. ) கல்லூரிகளில் பயிலும் மாணவர்களை உரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் கோரும் தேவையான எண்ணிக்கையின் அடிப்படையில் உரிய நாட்களில் பணியில் இருந்து விடுவித்து , இப்பணியில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment