Join THAMIZHKADAL WhatsApp Groups
நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டு மருத்துவ குணங்களை பெருமளவில் தன்னுள் அடக்கி வைத்துள்ளது.
ஆனால், ஒருசிலர் இதை உணவிலேயே சேர்த்து கொள்மாட்டார்கள். அவர்கள் நல்லதொரு மருந்தை இழக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
பூண்டு உடலில் உள்ள வாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது என்பதுடன், மற்றொரு வீரியமான சக்தியும் அதனுள் உள்ளது. ஆனால், அதாவது, நரமபுத் தளர்ச்சியாலும், வயோதிகத்தாலும் சிலருக்கு இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத நிலை இருக்கும். அவர்களுக்கு பூண்டு மிக அரிய மருந்து. இதுபோன்றவர்கள், உணவில் அதிகளவில் பூண்டை சேர்த்து கொண்டு வர, வாழ்வில் சுகம் காண்பார்கள்.
பூண்டுக்கு இருக்கும் மற்றொரு பெரிய சக்தி, காசநோயை தீர்த்து வைப்பதுதான். காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், தினமும் பாலில் 12 மிளகு, மஞ்சள் சிறிதளவு, முழுப்பூண்டு ஆகியவற்றை போட்டு சுண்ட காய்ச்சி, காலை, இரவு குடித்து வந்தால் காசநோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும். ஆனால், நோய் தீர்ந்தவுடன் இந்த மருந்தை நிறுத்திவிடுவது நல்லது. ஆஸ்துமா நோயாளிகளும் இந்த பாலை சாப்பிடும்போது, உடலில் சூடு அதிகரித்து, மூச்சுதிணறலை போக்கிவிடும்.
பூண்டில் அதிகளவு தாதுக்கள், விட்டமின், ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. பல நோய்களை தீர்க்கும் சிறப்பான ஒரு பொருள் பூண்டாகும்.
ஒரு சிலர் மூட்டுவலியால் அவதிப்பட்டு வருவதை பார்த்திருக்க முடியும். இதுபோன்றவர்கள் பூண்டினை உணவில் அதிகம் சேர்த்து கொண்டு வந்தால் வலி மறையும். இதேபோல், பூண்டை உணவில் சேர்த்து கொள்ளும்போது, அது ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது; வாயுக்களை வெளியேற்றுகிறது. இதனால் உடல் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பூண்டில் உள்ள ஈதர், நுரையீரல், இதற்கு செல்லும் குழாய், மூக்கின் மேல்பகுதியில் சேர்ந்துள்ள கெட்டி சளியை இளக்கி வெளியேற்றும்.
இந்த காலத்து இளம்பெண்கள் முகத்தில் ஏற்படும் பருக்களால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதற்காக நூற்றுக்கணக்கில் செலவழித்து கிரீம்களை வாங்கி வீணடிக்கிறார்கள். இதனால் ஒரு சிலருக்கு பயன் கிடைத்தாலும் பெரும்பாலானவர்களுக்கு, எதிர்மறை விளைவுகள்தான் கிடைத்து, முகமே அசிங்கமாகி உள்ளன.
ஆனால், பருக்களுக்கு இயற்கை அளித்த சிறப்பான மருந்து பூண்டு. பச்சை பூண்டை பருக்கள் இருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்து, அதன் சாறு அதில் படுமாறு செய்யவேண்டும். ஒரு சில நாட்கள் இப்படி தொடர்ந்து செய்துவர, பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். வடுவும் ஏற்படாது. பூண்டுகளில் பல ரகங்கள் இருந்தாலும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து கிடைக்கும் மலைப்பூண்டு ரகம் மிகச்சிறப்பானது.
No comments:
Post a Comment