Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்த முத்திரை பெயர் பிராண முத்திரை. பிராண முத்திரை செய்வதனால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு அகலும். கண்பார்வை அதிகரிக்கும்.
சரி இந்த முத்திரையை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
செய்முறை
முதலாவது விரிப்பல் சப்பணம் இட்டு, முதுகுத்தண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும்.
அதன்பின் சுண்டு விரல், மோதிர விரல், கட்டை விரல் என மூன்று விரல்களின் நுனிகள் ஒன்றோடொன்று தொட்டு இருக்கும் படி வைக்க வேண்டும்.
மற்ற விரல்களை நேராக வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படி இந்த முத்திரையை 10 நிமிடங்கள் செய்தால் உடலில் உள்ள எனர்ஜி அதிகரிக்கும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தினமும் நாற்பது நிமிடங்கள் தொடர்ந்து மூன்று மாதங்களுக்குப் பிராண முத்திரை செய்தால் பார்வைத் திறன் அதிகரிக்கும்.
கிட்டப்பார்வை, தூரப் பார்வை போன்ற பிரச்சனைகள் சரியாகும். இதனை தொடர்ந்து செய்ய முடியவில்யென்றால் 10 நிமிடங்களாக பிரித்துக்கூட செய்யலாம்.
மேலும் இடுப்பு, முதுகு வலிகளால் அவதிப்படுபவர்கள் இந்த முத்திரையைச் செய்துவந்தால் வலியின் வீரியம் குறையும். சிலருக்கு இந்த முத்திரை செய்யும்போது கண் எரிச்சல், கண்களில் நீர் வழிதல், போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் சிறிதளவு பஞ்சை சாதாரண நீரில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ளவும். அதன்பின் இளஞ்சூடான நீரில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைக்க வேண்டும். இப்படி மூன்று நிமிடங்கள் வரை செய்ய, கண் பிரச்னைகள் சரியாகும். மேலும் இரவு நேரம் பௌர்ணமி நிலவை 15 நிமிடங்கள் பார்த்தாலும் இந்த பிரச்னை சரியாகும்.
குறிப்பு :
பிராண முத்திரையைச் செய்யும்போது, கை நடுக்கம் ஏற்பட்டால் செய்வதை நிறுத்தி விடுங்கள். பிராண சக்தி அதிகமாகிவிட்டதை கைநடுக்கத்தின் மூலம் நீங்கள் உணருகிறீர்கள் என்று அர்த்தம் . ஆகவே இதனை செய்ய வேண்டாம்.வயதானவர்கள் இரவு 8 மணிக்கு மேல் இந்த முத்திரையைச் செய்ய வேண்டாம். தூக்கம் கலைந்துவிடும்.
No comments:
Post a Comment