Join THAMIZHKADAL WhatsApp Groups
உடல் சோர்வு உடல் பலவீனம் மிகவும் வலிமையேற்று காணப்படுதல் போன்றவற்றை குணப்படுத்தி எவ்வளவு வயதானாலும் மிகவும் ஆரோக்கியமாக வளமாக இளமையோடு இருப்பதற்கான ஒரு சுலபமான ரெமிடியை இங்கு பார்ப்போம்.
இந்த ரெமடியை எவ்வாறு தயாரிக்கலாம் என்பதை கீழே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
வால்நட்
உலர் திராட்சை
கற்கண்டு
பால்
இதயத்திலிருந்து மூளை வரை இந்த வால்நட் மிகவும் அற்புதமாக பயன்படுகிறது. இந்த வால்நட்ஸ் இதயம் சம்பந்தமான பல பிரச்சனைகளை நமக்கு வரவிடாமல் தடுக்கிறது. இதனால் சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக குணமாகிறது. அதேபோல முழங்கால் வலி கீழ்வாதம் மூட்டு வலி என அனைத்து பிரச்சினைகளையும் நொடி பொழுதில் குணமாக்குகிறது.
உலர் திராட்சையில் அயன், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், ஃபைபர் போன்ற சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது. இது நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பலவீனத்தையும் சரி செய்கிறது.
செய்முறை:
1. ஒரு பவுலில் நான்கு அல்லது ஐந்து வால்நட்ஸ், இரண்டு ஸ்பூன் அளவு உலர் திராட்சையை எடுத்துக் கொள்ளவும்.
2. பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கிளாஸ் அளவு பாலை ஊற்றி அதனுடன் இந்த வால்நட் மற்றும் உலர் திராட்சையை சேர்க்கவும்.
3. பால் நன்கு கொதித்து பொங்கிய பிறகு ஒரு கிளாஸில் மாற்றிக் கொள்ளவும்.
4. இப்போது இதனுடன் அரை ஸ்பூன் அளவு கற்கண்டை சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு நன்றாக கலந்து வரவும்.
இதை தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக குடித்து வரவும். அல்லது வேலை இல்லை என்றால் காலை உணவு சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து 10 லிருந்து 12 மணிக்குள் எடுத்துக் கொள்ளவும். இதை சரியான அளவு நாம் எடுத்துக் கொண்டால் உடல் பலவீனம் உடல் சோர்வு அனைத்தும் நம்மை விட்டு தூரமாக சென்று விடும்.
இந்தப் பால் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றும் அதில் நாம் சேர்த்து இருக்கக்கூடிய வால்நட்ஸ் மற்றும் உலர் திராட்சை நன்கும் என்று சாப்பிட வேண்டும்.
இதை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வர உடலில் ஏற்படக்கூடிய பலவீனம் உடல் சோர்வு அசதி என அனைத்தும் உடனடியாக சரியாகும். மேலும் இதைத் தொடர்ந்து குடித்து வருவதால் மூளை மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
No comments:
Post a Comment