Join THAMIZHKADAL WhatsApp Groups
மாரடைப்பு பெரும்பாலும் அதிகாலை வேலையில் தான் அதிகமாக வருவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுமுறை ஆகியவை மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், மாரடைப்பைத் தடுப்பதற்கு, அதன் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்தால் மிகவும் எளிதாக இருக்கும்.
இதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், இது வாழ்நாள் முழுவதும் இடைவிடாது மற்றும் ஓய்வின்றி வேலை செய்ய வேண்டும்.
அதனால் தான் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம், அதை ஆரோக்கியமாக வைத்திருக்க, உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவு இரண்டும் சரியாக இருக்க வேண்டும்.
சமீப காலமாக மாரடைப்பு என்பது பலருக்கும் வந்து உயிரை பறித்து வருகின்றது. ஆனால் இவை ஒரு குறிப்பிட்ட நாளில் வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை பல நாடுகளில் விடுமுறையாக காணப்பட்டு, திங்கள் வேலையை தொடங்கும் தினமாக இருப்பதால் அதிக அளவு பதற்றம், மன அழுத்தம் இவற்றினால் ஏற்படுவதாக கூறுகின்றனர்.
மாரடைப்பு ஏற்படும் அபாயம் காலத்துக்கு ஏற்ப குறைந்து கொண்டே வரும் நிலையில், எந்த நேரத்தில் மாரடைப்பு அபாயம் அதிகம் என்பதை கூறியுள்ளனர்.
சில நிபுணர்கள் மாரடைப்பு ஆபத்து இரவை விட பகலில் அதிகமாக இருப்பதாக நம்புகிறார்கள். ஆனால் அதில் நேரத்தை நிர்ணயிக்க முடியாது.
விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், மாரடைப்பு ஏற்படும் அபாயம் இரவிலோ, பகலிலோ அல்ல, காலையில் தான் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை மாரடைப்பு அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment