Join THAMIZHKADAL WhatsApp Groups
போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ் தேசிய சோசலிஸ்ட் கட்சி சாா்பில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ள மனு:
தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தில் இரவு பகலாக பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பா் முதல் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படவில்லை.
அரசின் பிற துறை ஊழியா்களுக்கு முறையாக வழங்கும் நிலையில், போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களைக் கண்டு கொள்ளாத நிலையில் அரசு உள்ளது.
ஆகவே, மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உடனடியாக போக்குவரத்துக்கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment