Join THAMIZHKADAL WhatsApp Groups
புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போறீங்களா? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை தெரியுமா? குழந்தையின் பெயரை ரேஷன் கார்டில் எப்படி சேர்க்க வேண்டும் தெரியுமா?
புதிய ரேஷன் கார்டுகளை யாருக்கும் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், எப்படியும் 3 மாதங்கள் கழித்துதான் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றும் 2 மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகியிருந்தன.
அரசு தரப்பிலிருந்து, மான்யம் கிடைக்க வேண்டும் என்றாலோ, அல்லது நலத்திட்ட உதவிகள், பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற உதவிகள் கிடைக்க வேண்டும் என்றாலோரேஷன் கார்டுகள் வைத்திருப்பது அவசியம். ரேஷன் கார்டு இல்லாவிட்டால், இவைகளை பெற முடியாது.
வங்கிக்கணக்கு: ரேஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்களின் கை ரேகை இருந்தால் மட்டுமே ரேஷன் உதவிகளைப் பெறமுடியும்... மேலும், ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.. இதனால் மோசடிகளை தடுக்க முடியும்.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, 2.24 கோடி குடும்ப ரேஷன் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளன.. கடந்த மே 2021 முதல் இப்போதுவரை 15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வினியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது, மேலும், புதிய ரேஷன் கார்டுகள் கேட்டும், பெரும்பாலானோர் விண்ணப்பிக்க துவங்கிவிட்டனர்.. இப்படி புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தால், தனி சமையல் அறையுடன் வசிப்போர், விண்ணப்பித்த 30 நாட்களுக்குள், புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்பது அடிப்படையான விஷயம்.
புது கார்டுகள்: அதேபோல, புதிதாக திருமணமானவராக இருந்தால்,ஏற்கனவே இருக்கும், பெற்றோரின் ரேஷன் கார்டில் பெயரை நீக்கினால்தான் அவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். பெயரை நீக்குவதற்கு சில முறைகள் உள்ளன. தம்பதியினரின் 2 பேரின் ஆதார் கார்டும், திருமணம் நடைபெற்ற சான்றும் தேவை. மேலும், தனியாக வசிப்பதற்கு ஆதாரமாக சிலிண்டர் பில்லை ஆதாரமாக காண்பிக்க வேண்டும்..
முகவரி சான்றுக்கு, வீட்டு வாடகை பத்திரம் போன்றவையும் தேவைப்படும். அப்போதுதான், ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்ய முடியும். பெயர் நீக்கம் செய்த பிறகு அந்த ரேஷன் கார்டில் இருந்த அனைத்து உரிமைகளையும் இவர்கள் இழந்துவிடுவார்கள். அதற்கு பிறகு, புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
குழந்தைகள் பெயர்: அதேபோல, குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டுமென்றால், முன்பெல்லாம் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் மட்டும் இருந்தால் போதும்.. ஆனால், இப்போது அப்படியில்லை.. ஆதார் கார்டும் வேண்டும் என்கிறார்கள்..
ஆதார் இல்லாமல் கூடுதல் பொருட்களையும் வாங்க முடியாது. அதனால், குழந்தைகளுக்கும் ஆதார் கார்டினை வாங்கிக்கொண்டு ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்யலாம்.. இல்லாவிட்டால், அனைவரின் பெயரைசேர்த்து விட்டு, குழந்தைக்கும் ஆதார் வாங்கிக்கொண்டு அதற்கு பிறகு வேண்டுமானால் பெயரை சேர்த்து கொள்ளலாம். 5 வயதிற்குட்பட்ட குழந்தை என்றால், பிறப்பு சான்று கொடுத்தால் மட்டும் போதும்..
ரேஷன் கார்டு: ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது பொதுச்சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். பொதுச் சேவை மையங்களில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பொதுச் சேவை மையங்கள் என்றால், போன்ற சிரமங்கள் இல்லாமல் உடனே விண்ணப்பிக்கலாம்.. எப்படியிருந்தாலும், விண்ணப்பித்த 20 நாட்களுக்குள்ளேயே புது ரேஷன்கள் கிடைத்துவிடும்.
No comments:
Post a Comment