எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் முதல்கட்ட கலந்தாய்வில் இடம் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கல்லூரிகளில் சேர்வதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றே கடைசி நாள் ஆகும்.
தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில் மருத்துவ இடங்கள் பெற்ற செயற்கையாக பெற்றவர்கள் வெள்ளிக்கிழமை மாலை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் அவ்வாறு சேராத இடங்கள் காலியாக அறிவிக்கப்பட்ட இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
No comments:
Post a Comment