Join THAMIZHKADAL WhatsApp Groups
செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், ஆடம்பரம் உள்ளிட்டவற்றிற்கு காரணியாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான்.
நவகிரகங்களும் அவ்வப்போது தங்களது ராசி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் கிரகங்களில் அஸ்தமனம் மற்றும் உதயம் ஏற்படும்.
இந்த கிரக மாற்றங்கள் ஆனது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மட்டும் அதிர்ஷ்டம் கிடைக்கும். கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி அன்று கடக ராசியில் சுக்கிர பகவான் உதயமானார். இதனால் பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
மிதுன ராசி
உங்கள் ராசியில் சுக்கிர பகவான் இரண்டாம் வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் அதிர்ஷ்ட பலன்களை நீங்கள் அனுபவிக்க போகின்றீர்கள். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினரிடம் முழு ஆதரவு கிடைக்கும். நல்ல செய்தி உங்களை தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு ராசி
உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் சுக்கிர பகவான் உதயமாகின்றார். அனைத்து விதமான வழிகளிலும் பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொழில் நல்ல முன்னேற்றத்தை தரும். புதிய முதலீடுகள் செய்வதற்கு சரியான நேரம் இது. நண்பர்களால் உதவி கிடைக்கும்.
துலாம் ராசி
சுக்கிர பகவான் பத்தாம் வீட்டில் உதயமாகியுள்ளார். எதிர்பாராத நேரத்தில் பணவரவு அதிகமாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்டபடி வருமானத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment