Join THAMIZHKADAL WhatsApp Groups
மாணவர்கள் தங்களது ஒரிஜினல் மார்க் சீட்டை லேமினேஷன் செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒரிஜினல் மார்க் சீட் கடந்த ஜூலை 31ம் தேதிமுதல் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஒரிஜினல் மார்க் சீட்டை பாதுகாப்பு காரணங்களுக்காக பலரும் அதனை லேமினேஷன் செய்கின்றனர். இதுபோன்ற செயலை இனிமேல் செய்ய கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், பிற்காலத்தில் அரசு பணி அல்லது உயர் கல்விகளில் சேரும் போது சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் அரசு முத்திரை பதிக்கப்படும் என்பதால் மதிப்பெண் சான்றிதழை லேமினேஷன் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment