Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 26, 2023

டிராகன் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் குறித்து தெரியுமா?

மார்கெட் சென்றால் அனைவருமே பிங்க் நிறத்தில் தனித்துவமான தோற்றத்தைக் கொண்ட ஒரு பழத்தை கண்டிருப்போம்.

அது தான் டிராகன் பழம். இந்த பழம் இனிப்புச் சுவையைக் கொண்ட வெப்பமண்டல பழமாகும்.

நிறைய பேர் இந்த பழத்தின் சுவை எப்படி இருக்குமோ என்று நினைத்து அதை வாங்கி சாப்பிட யோசிப்பார்கள். ஆனால் இந்த பழம் ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய அற்புதமான பழம். இப்பழத்தை சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

இதன் சுவை எப்படி இருக்கும் என்று கேட்டால், கிவி மற்றும் பேரிக்காய் ஆகிய இரண்டின் சுவையைக் கொண்டிருக்கும். இந்த பழத்தை வெட்டினால், அதனுள் வெள்ளை நிற கருப்பு விதைகளைக் கொண்ட சதைப் பகுதி இருக்கும். இந்த வித்தியாசமான பழம் தற்போது பரலவான அனைத்து பகுதிகளிலும் உள்ள பழக்கடைகளில் காணலாம்.

டிராகன் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, மக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. இது தவிர புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம் போன்றவையும் இப்பழத்தில் அதிகமாக உள்ளன. இந்த பழத்தை ஒருவர் அடிக்கடி உட்கொண்டு வந்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைத் தடுக்கலாம். இப்போது டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

1. சர்க்கரை நோயின் அபாயம் குறையும்

டிராகன் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கும் மற்றும் சர்க்கரை நோயாளிகளில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும். இந்த அற்புத பழத்தை அடிக்கடி ஒருவர் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவைப் சமநிலையில் பராமரிக்க பெரிதும் உதவி புரிந்து, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

2. புற்றுநோயின் அபாயம் குறையும்

டிராகன் பழத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது குடல்புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. வைட்டமின் சி-யானது ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட். இது நாள்பட்ட நோய்களான சர்க்கரை நோய், அல்சைமர், பர்கின்சன், புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைத் தடுக்கிறது.

3. செரிமானத்திற்கு நல்லது

டிராகன் பழத்தில் ஒலிகோசாக்கரைடுகள் என்னும் ஒரு வகையான கார்போஹைட்ரேட் உள்ளது. இது ஃப்ளோரா போன்ற நல்ல பாக்டீரியாக்களின் வளரச்சிக்கு உதவி புரிந்து, மென்மையான செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளன. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது.

4. இதயத்திற்கு நல்லது

சிவப்பு நிற சதைப் பகுதியைக் கொண்ட டிராகன் பழத்தில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பீட்டாலைன்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள சிறிய கருப்பு நிற விதைகளில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

5. முதுமையைத் தடுக்கிறது

மன அழுத்தம், மாசடைந்த சுற்றுச்சூழல், மோசமான உணவுப் பழக்கம் போன்றவற்றால் விரைவிலேயே ஒருவர் முதுமைத் தோற்றத்தைப் பெறுகிறார்கள். ஆனால் டிராகன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை அதிகளவில் உள்ளன. இவை சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், இளமையான தோற்றத்திற்கும் இன்றியமையாதவைகளாகும். ஆகவே இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், சருமத்தின் இளமைத் தோற்றத்தை நீட்டிக்கலாம்.

6. எலும்புகளுக்கு நல்லது

பல்வேறு காரணிகளால் எலும்புகள் விரைவில் பலவீனமடைந்துவிடுகின்றன. இதன் விளைவாக மூட்டு வலி, மூட்டுகளில் காயங்கள் போன்றவை ஏற்படுகின்றன. ஆனால் டிராகன் பழத்தில் 18% மக்னீசியம் உள்ளது. இது எழம்புகளின் வலிமைக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமான சத்தாகும். ஆகவே எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டுமானால் டிராகன் பழத்தை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.

7. கண்களுக்கு நல்லது

டிராகன் பழத்தில் பீட்டா கரோட்டீன் அதிகமாக உள்ளது. இது கண் புரை, மாகுலர் சிதைவு போன்ற கண் பிரச்சனைகளைத் தடுக்கிறது. ஆகவே கண் தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடாதெனில், டிராகன் பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.

8. கர்ப்பிணிகளுக்கு நல்லது

டிராகன் பழத்தில் வைட்டமின் பி, ஃபோலேட் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிகமாக உள்ளன. பி வைட்டமின்கள் மற்றும் ஃபோலேட்டுகளானது பிறப்பு குறைபாடுகளை தடுக்கும் மற்றும் கர்ப்ப காலத்தில் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். மேலும் இப்பழத்தில் கால்சியம் அதிகம் உள்ளதால், இது சிசுவின் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவி புரியும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News