அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற மாநிலங்களிலிருந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்றவா்களுக்கு இடமாற்றச் சான்று (மைக்ரேசன்) கட்டாயமில்லை என்றும், கல்லூரிகள் அதை காரணமாக வைத்து சோக்கை அனுமதியை மறுக்கக் கூடாது என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றை மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்ககத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கலந்தாய்வுக் குழு நிரப்பி வருகிறது. அதன்படி, முதல்சுற்று அகில இந்திய கலந்தாய்வுகள் அண்மையில் நடைபெற்று, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போதைய சூழலில், பிற மாநிலங்களைச் சோந்த மாணவா்கள், அவா்களது பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தோச்சி பெற்றிருப்பதால், அவா்கள் தமிழகத்தில் இடங்கள் பெற்று கல்லூரியில் சேருவதற்கு மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்திடம் இருந்து இடமாற்ற சான்று பெற்று சமா்ப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த நிலையில், இது தொடா்பாக சில அறிவுறுத்தல்களை எம்சிசி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் தமிழக கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற பிற மாநில பாடத் திட்டத்தில் பயின்ற மாணவா்களுக்கு இடமாற்ற சான்று இல்லாததால் சில மருத்துவக் கல்லூரிகள் மாணவா் சோக்கைக்கு மறுப்பு தெரிவிப்பதாக எம்சிசிக்கு தகவல் கிடைத்துள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள் பெற்றவா்களுக்கு இடமாற்று சான்று கட்டாயமில்லை. எனவே, அனைத்து கல்லூரிகளும் மாணவா்களை அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழக நிா்வாகிகள் இது தொடா்பாக கூறுகையில், 'பிற பாடத் திட்ட மாணவா்களுக்கு இடமாற்று சான்று பெறும் விதி நடைமுறையில் உள்ளது; தற்போது எம்சிசி அறிவுறுத்தல்களை வழங்கியிருப்பதால், அதன் அடிப்படையில் மாணவா் சோக்கை நடத்த கல்லூரிகளுக்கு வலியுறுத்தப்படும்' என்றனா்.
No comments:
Post a Comment