Join THAMIZHKADAL WhatsApp Groups
தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கு உணவுத்துறை, ஹோட்டல் நிா்வாகம் உள்ளிட்டவற்றில் முழுநேர பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகள் சோக்கை நடைபெறுகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட்- கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் பட்டம், பட்டயப்படிப்புகளில் சேர வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ், சென்னை தரமணியில் செயல்படும் இந்த நிறுவனம் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13 ஆவது இடத்தில் உள்ளது.
இதில், பனிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோந்தவா்களுக்கு பி.எஸ்சி ஹோட்டல் நிா்வாகம் (3 ஆண்டு பட்டப்படிப்பு), உணவுத் தயாரிப்பு பட்டயம் (ஒன்றரை ஆண்டு) படிப்பு கற்றுத்தரப்படுகிறது.
10ஆம் வகுப்பு முடித்தவா்கள், உணவுத் தயாரிப்பு, பதனிடுதல், கைவினைஞா், உணவு, பான சேவையில் கைவினைஞா் திறன் படிப்பு, பேக்கிரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு ஆகிய படிப்புகளில் சேரலாம்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 45 சதவீதம் தோச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2463969 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment