Join THAMIZHKADAL WhatsApp Groups
புதினா இலைகளை சுத்தம் செய்து, துவையல் அரைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் பித்தம் நீங்கும்.
டீ தயாரிக்கும் போது, டீ தூளுடன் ஐந்து அல்லது ஆறு புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.
புதினாவை வெந்நீர் காய்ச்சும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பித்தத்தினால் ஏற்படும் நோய்கள் தீரும். பச்சையாக வெங்காயத்துடன் உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டால் பித்தத்தினால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.
ஆவாரம் பூவைக் காய வைத்து, பொடி செய்து டீத்தூளுக்கு பதிலாக உபயோகப்படுத்தினால் சுவை மிக்க டீ கிடைப்பதுடன் பித்தம், வாந்தி, உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும். பித்தம் சம்பந்தமான நோய்களை நீக்கும் வலிமை கொத்தமல்லிக்கு உண்டு.
சுக்கு, தனியா, கருப்பட்டி மூன்றையும் கலந்து, காப்பி தயாரித்து குடித்தால் பித்தம் நீங்கி விடும். அகத்திப்பூ பித்தத்தை போக்க வல்லது. மேலும் உடல் அழற்சியையும் போக்கும். பூவை உணவில் சேர்த்து வந்தால் போதும்.
No comments:
Post a Comment