Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 5, 2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு - இடஒதுக்கீடு முடிவுகள் நாளை வெளியாகிறது

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் நடந்த கலந்தாய்வில் இடஒதுக்கிடு பெற்றவர்களின் விவரங்கள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம்கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 25-ம் தேதி முதல் சுகாதாரத்துறை இணையதளங் களில் நடைபெற்று வருகிறது. பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களை தேர்வு செய்வது கடந்த3-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடுசெய்வது இன்று நிறைவடையஉள்ளது. ஆகஸ்ட் 6-ம் தேதி(நாளை) இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி மாலை 5 மணி வரை இட ஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆகஸ்ட் 11-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் மருத்துவக் கல்வி மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஆர்.முத்துச் செல்வன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News