தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மருத்துவ தர நிர்ணயம், மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024-25-ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கவும், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும் செப். 19 வரை விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி.,எம்.எ.ஸ், டி.எம்., எம்சிஹெச் படிப்புகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் செப். 15 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தற்போது கல்லூரியில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான அங்கீகாரம் குறித்த தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.விண்ணப்பக் கட்டணத்தை ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment