Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 29, 2023

கருத்தாளர்களாக ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகள் பாதிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
குறுவள மையங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதால் மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் சேதுசெல்வம் தெரிவித்துள்ளார்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநருக்கு அனுப்பிய மனுவில் சேதுசெல்வம் கூறியிருப்பதாவது:

குறுவள மையம்மூலம் நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சிக்கு மாநில, மாவட்ட அளவில் கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வரையிலான காலங்களில் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல் பாதிக்கப்படுகிறது.

இப்பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர்களை விடுவித்து அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்றுனர்களை ஈடுபட செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News