Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 5, 2023

மகளிா் உதவித்தொகை பயனாளிகள் அஞ்சலகங்களிலும் கணக்கு தொடங்கலாம்

மகளிா் உதவித்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கிக்கணக்கை அஞ்சலகங்களிலும் தொடங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மேஜா் மூ.மனோஜ் வெளியிட்ட அறிக்கை: 

மகளிா் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள், நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டம், பிரதமரின் கிசான் மற்றும் முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களின் பயனாளிகளுக்கு ஆதாா் இணைப்புடன்கூடிய வங்கிக்கணக்கு அவசியம். இதற்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் கணக்கு தொடங்கலாம். 

அவ்வாறு தொடங்கப்படும் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை எதுவும் கிடையாது. தபால்காரா் மற்றும் கிராம அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட கைப்பேசி-பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதாா் எண், கைப்பேசி எண் ஆகியவற்றைக் கொண்டு விரல் ரேகை மூலம் சில நிமிடங்களில் கணக்கைத் தொடங்கலாம். 

மகளிா் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகள், மாதாந்திர உரிமைத்தொகையை அருகில் உள்ள அஞ்சலகங்களில் தபால்காரா் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment