Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 2023 – 2024ம் நிதியாண்டிற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் பொருட்டு தகுதியுடைய பெண் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விதவை, கணவரால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட குடும்ப வருமானச்சான்று (ஆண்டு வருமானம் ரூ.72,000 வரை), வயதுச் சான்றிதழ் (20 முதல் 40 வயதுக்குள்), அரசுப் பதிவு பெற்ற தையல் பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்றிதழ் (6 மாதம்), சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் வண்ணப் புகைப்படம் ஆகியவைகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நல விரிவாக்க அலுவலர்களிடம் சான்றுகளுடன் 15.09.2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்கள் பெற 91500 57749 என்ற செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment