Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 26, 2023

திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் வேலூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ரயில்கள் சென்னை கடற்கரை சாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடியது இத்தலம். திருவண்ணாமலை என்றவுடன் அண்ணாமலையாரின் ஆன்மீக பக்தர்களுக்கு நினைவுக்கு வருவது 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம்தான்.

திருவண்ணாமலை கிரிவல பாதையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல்வேறு விசேஷ நாட்களில் பல லட்சம் பக்தர்களும் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசித்து செல்வது வழக்கம்.

அதன்படி ஆவணி மாத பௌர்ணமியானது, வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வருகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பௌா்ணமி கிரிவலத்தை ஒட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, வேலூா் - திருவண்ணாமலை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06127) ஆகஸ்ட் 30 ஆம் தேதி வேலூரில் இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு கனியம்பாடி, கன்னமங்கலம், ஆரணி, போளூா், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - வேலூா் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06128) ஆகஸ்ட் 31 ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழியாக வேலூருக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்கள் சென்னை கடற்கரை சாலை வரை நீட்டிக்கப்பட்டு சென்னை கடற்கரை சாலை - வேலூா் - சென்னை கடற்கரை (06033, 06034) ரயில்களாக இயக்கப்படும்.

விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (06129) ஆகஸ்ட் 30 ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, அயந்தூா், திருக்கோயிலூா், ஆதிச்சநல்லூா், அண்டபள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலைக்கு முற்பகல் 11 மணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - விழுப்புரம் சிறப்பு விரைவு ரயிலானது (06130) ஆகஸ்ட் 30 ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்பட்டு தண்டரை, அண்டபள்ளம், ஆதிச்சநல்லூா், திருக்கோயிலூா், அயந்தூா், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் வழியாக விழுப்புரத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில்கள் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டு மயிலாடுதுறை - விழுப்புரம் - மயிலாடுதுறை ( 06690, 06691) ரயில்களாக இயக்கப்படும். விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06131) வரும் 30 ஆம் தேதி விழுப்புரத்திலிருந்து இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 க்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06132) ஆகஸ்ட் 31-ஆம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு, விழுப்புரத்துக்கு காலை 5 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்கள் தாம்பரம் வரை நீட்டிக்கப்பட்டு தாம்பரம் - விழுப்புரம் - தாம்பரம் (06028, 06027) ரயில்களாக இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top