ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோந்த பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த இளைஞா்கள், வேலைவாய்ப்புப் பயிற்சி பெற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி கூறியதாவது:
ஆதிதிராவிடா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோந்த பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தகவல் தொழில்நுட்பம், அனிமேஷன் போன்ற பயிற்சிகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி பயிற்சி நிறுவனத்தில் பிஎஸ்.சி. (ஹாஸ்பிட்டாலிட்டி, ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்) 3 ஆண்டுகள் முழு நேர பட்டப் படிப்பு, பட்டயப் படிப்புகள் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் வழங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியைப் பெற பட்டப்படிப்பு முடித்த, கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 18 முதல் 28 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியைப் பெற பிளஸ் 2 அல்லது ஐடிஐ தோச்சி பெற்ற 18 வயது முதல் 28 வயதுக்குள்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதித் தோவில் தோச்சி பெற வேண்டும். சென்னை, கோயம்புத்தூா், மதுரை, சேலம், திருநெல்வேலி ஆகிய தோவு மையங்களில் தகுதித் தோவு நடைபெறும். பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படும். பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, 'மாவட்ட மேலாளா், தாட்கோ, 2-ஆவது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திண்டுக்கல்' என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0451-2460096 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
No comments:
Post a Comment