Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசின் அறிவுறுத்தல்களின்படி, இந்திய குடிமக்கள் தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டைகளை இணைக்க வேண்டும். சமீபத்திய தகவல்களின்படி, கிராமப்புறங்களில் உள்ள தபால் நிலையங்கள் மூலம் இரண்டு அட்டைகளையும் இணைக்கும் வசதியை கொண்டுவர அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த சேவைகளை "இலவசமாக" வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ஆதிர் சௌத்ரி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை மத்திய நிதி அமைச்சகம் சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அனுப்பியது. இந்த நிலையில் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்தாதது பொருத்தமாக இருக்காது என அரசாங்கம் கருதுகிறது. ஆதிர் சவுத்ரி மார்ச் மாதம் நிதி அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார், அதில் அவர் உள்ளூர் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களுக்கு அட்டை இணைப்பு வசதிகளை இலவசமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
சௌத்ரியின் கூற்றுப்படி, கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பான்-ஆதார் இணைப்பு என்ற பெயரில் இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். அதனால் இணைப்புக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஜூன் 27ஆம் தேதி பதில் அளித்த மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கார்டுகளை இணைக்க 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டதாகவும், அது அவ்வப்போது நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். "எனவே காலக்கெடுவை நீட்டிப்பது சாத்தியமில்லை" என்று கூறினார். பான்-ஆதார் இணைப்புக்கான கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவது, இணைப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்திய அட்டைதாரர்களுக்கு அநீதியானது என்றும் பங்கஜ் சவுத்ரி கூறினார்.
நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஜூன் 30 2023, பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைப்பதற்கான கடைசி தேதி என்றும், கார்டுகளை இணைப்பதற்கான கட்டணம் ரூ.1000 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தேதிக்குள் யாராவது தங்கள் கார்டுகளை இணைக்கத் தவறினால், பான் கார்டு செயலிழந்துவிடும். முதலீட்டாளர்களும் தங்கள் பான் கார்டுகளை இணைக்குமாறு செபி (Securities and Exchange Board of India) கேட்டுக் கொண்டுள்ளது. இந்த இரண்டு கார்டுகளும் இணைக்கப்படுவதற்கான காரணம் என்னவென்றால், ஒரு நபருக்கு பல பான்கள் வழங்கப்பட்டன. அதனால் டூப்ளிகேட் கார்டுகளை கண்டறிய இது ஒரு வழியாகும்.
No comments:
Post a Comment