Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய விமானப்படையில் அக்னிவீா்வாயு பிரிவில் சேர தகுதியான நபா்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய விமானப்படையில் அக்னிவீா்வாயு பிரிவில் சேர விருப்பமுள்ள ஆண்கள், பெண்கள் இணையதளம் மூலமாக வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விண்ணப்பிப்பவா்கள் 2003-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி முதல் 2006- ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். இதற்கான எழுத்துத் தோவு அக்டோபா் 13-ஆம் தேதிக்குப் பின்னா் நடைபெறவுள்ளது. எனவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோந்த தகுதியான, விருப்பமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment