Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 7, 2023

மொபைல் போனில் டிவி பார்க்கலாம் மத்திய அரசு திட்டம்

 

மொபைல் போனில் இன்டர்நெட் டேட்டா இல்லாமல் டிவி சேனல்களை நேரடியாக பார்ப்பதற்கான வசதிகளை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு டிவி சேனல்கள் நேரலையாக ஒளிபரப்பு செய்கின்றன. இந்நிலையில் இன்டர்நெட் டேட்டா ஏதும் இன்றி, மொபைல் போனிலேயே டிவி சேனல்களை நேரலையாக பார்க்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.இந்த சேவையை D2M (Direct to Mobile) என்று அழைக்கப்படுகின்றது

தற்போது டிவிக்களில் டிடிஎச் சேவை மூலமாக தொலைக்காட்சி சேனல்களை பார்க்கும் வசதி இருப்பதை போல லைவ் டிவி சேனல்களை மொபைல் போனிலேயே பார்க்கும் வசதியை கொண்டு வருவது குறித்துதான் பரிசீலனை நடக்கிறது.டைரக்ட் டூ மொபைல் (D2M) என்ற தொழில் நுட்பத்தின் மூலம் பயனார்கள் எந்த இடத்தில் இருந்தாலும் டிவி சேனல்களை நேரடியாக பார்க்க முடியும்.

No comments:

Post a Comment