Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அமையங்களில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன . தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ( TRB ) நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு 2023 டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது . மேலும் இத்தேர்வு தொடர்பான விவரங்கள் அறிந்து கொள்ள Glamotron http://www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து சென்னை , கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான கட்டணமில்லா நேரடி ( Offline ) பயிற்சி வகுப்புகள் 21.08.2023 அன்று தொடங்கப்படவுள்ளது . இப்பயிற்சி வகுப்பில் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன . இவ்வலுவலகத்தால் நடத்தப்படவுள்ள TET Paper -1 மற்றும் Paper - II தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள Google Form link https://forms.gle/rnAmQdHPf2UJwp5e8 அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள QR ஸ்கேன் செய்து தங்களின் விவரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment