Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 3, 2023

ஆடிப்பெருக்கு : செல்வத்தையும், இறையருளையும் இரட்டிப்பாக பெற இன்று இதை செய்யுங்க..!

இந்த நல்லநாளில் கங்காதேவிக்கு நன்றி சொல்ல வேண்டும் ஆனால் அருகில் நீர் நிலைகள் இல்லாத நிலையில் காவிரி ஆற்றுக்கா போய் வழிபட முடியும் என்று சொல்பவர்கள் வருந்தவேண்டாம்.

வீட்டிலும் ஆடிப்பெருக்கை கோலாகலமாக கொண்டாடலாம். புண்ணிய நதிகளை வீட்டிற்குள் வரவழைக்கலாம். கூடுதலாக வீட்டில் செல்வம் வளரும் அருளையும் பெறலாம்.

வீட்டையும் பூஜையறையையும் சுத்தம் செய்யுங்கள். குடத்தைச் சுத்தம் செய்து குடம்நிறைய நிறைய தண்ணீரை கொண்டு வந்து பூஜையறையில் வையுங்கள். மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டு குடத்து நீரில் பிள்ளையாரை கரைத்துவிடுங்கள். பூஜையறையில் அகல்விளக்கேற்றி பூஜைக்குரிய தேங்காய், வெற்றிலைப்பாக்கு, பழங்கள் வைத்து தூப தீபம் காட்டி உதிரி புஷ்பங்களைக் குடத்து நீரில் போடுங்கள்.


குடத்தின் அருகில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி கங்கை, காவிரி, யமுனை, நர்மதை, வைகை என புண்ணிய நதிக ளை நினைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த நீரை செடிகளில் ஊற்றி விட வேண்டும். உங்கள் ஒரு மிக்க வழிபாட்டில் கங்காதேவியே அருள்புரிவாள். அதோடு ஆடிபெருக்கு வழிபாடு செல்வத்தை அதிகரிக்க செய்யும்.

இன்று செய்யும் காரியங்கள் பன்மடங்கு பலனை அள்ளித்தரும் என்பது ஐதிகம். இந்நாளில் நகை வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்பது நம்பிக்கை. இன்று செய்யும் தானத்துக்கும் புண்ணியம் இரட்டிப்பாகும் சேமிப்பும் பல மடங்கு பெரு கும். ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆடி பெருக்குநாள் மட்டும் இதிலிருந்து விலக்கப்படுகிறது. ஆம் இன்று தொடங்கும் எந்த நல்லகாரியமும் வெற்றிகரமாக முடியும். பெண்கள் வீட்டில் மூத்த சுமங் கலிகளிடம் அல்லது கணவனிடம் மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்ளலாம்.

காவிரிக்கு ஸ்ரீரங்க பெருமாள் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை-பாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை அளிப்பார். ஸ்ரீரங்க பெருமாள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு அபிஷேகம், ஆராதை செய்யப்படும். அதன்பிறகு அவர் தங்கை காவிரிக்கு அளிக்கும் சீர்வரிசைகளை யானை மேல் ஏற்றி அம்மா மண்டபத்திலுள்ள படித்து றையில் கொண்டுவருவார்கள்.அதன் பிறகு காவிரிக்கு சீரை அளிப்பார்கள். இந்த சீரை சமர்ப்பிக்கும் காட்சியைக் கண் டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதிகம். காவிரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கை கொண்டாடும் மக்கள் இந்தக் காட்சியை அவசியம் கண்டு அருளை பெறுங்கள்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News