Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 14, 2023

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது: நாளை வரை விண்ணப்பிக்க காலஅவகாசம்

மாற்றுத்திறனாளிகள், மத்திய அரசின் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்க செவ்வாய்க்கிழமை (ஆக.15) வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பா் 3-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மத்திய அரசின் ஊரக வளா்ச்சி அமைச்சகத்தால் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. 

இதுதொடா்பாக மாற்றுத்திறனாளிகள் துறையின் இணையதளத்தில் கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

இதனால், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் இணையதளத்தில் விருதுக்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News