Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு, மின்வாரியம் சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. நீண்டகாலம் காத்திருக்கும் விவசாயிகள், 'தட்கல்' முறையில், முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்சாரம் பெறும் திட்டத்தை, 2017ல் தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும், 'தட்கல்' முறையில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளும் தற்போது பதிவு செய்யும் விவசாயிகளும், 'தட்கல்' முறையில் எளிதாக இலவச மின் இணைப்பு பெறலாம்.ஐந்து எச்.பி., இணைப்புக்கு, இரண்டு லட்சம் ரூபாய்; ஏழு எச்.பி., முதல் 10 எச்.பி., வரையில், மூன்று லட்சம் ரூபாய் 15 எச்.பி., வரையில் பெற, நான்கு லட்சம் ரூபாய் பணம் செலுத்தி இணைப்பு பெறலாம்.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகள், பதிவு செய்யாத விவசாயிகள், 'தட்கல்' முறையில் இலவச மின் இணைப்பு பெறலாம். அதற்காக அந்தந்த செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்,' என்றனர்.
No comments:
Post a Comment