Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 2, 2023

இனி வாழ்நாள் முழுவதும் அல்சர் தொந்தரவு இருக்காது!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வயசு வித்தியாசமின்றி இன்று அனைவருமே எதிர்கொள்ளும் பிரச்னையாக இருப்பது அல்சர்தான்.


நேரத்துக்கு உணவு எடுத்துகொள்ளாதது உள்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது.

தொண்டையில் இருந்து இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல் போன்றவற்றில் ஏற்படும் புண்களை வயிற்றுப் புண் அல்லது பெப்டிக் அல்சர் என்கிறோம்.

காரமான உணவை எடுத்துக்கொள்வதாலும், மனஅழுத்தம் காரணமாகவும் வயிற்றுப் புண் ஏற்படுவதாகக் கூறப்பட்டுவந்தது.

ஆனால் தற்போது வயிற்றில் வாழும் கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியா காரணமாக வயிற்றுப் புண் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.நாம் உட்கொள்ளும் உணவு செரிப்பதற்காக, இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம்உள்ளிட்ட அமிலங்கள் சுரக்கின்றன.

இந்த அமிலங்கள் அதிகமாகச் சுரக்கும்போது இரைப்பையின் சுவரைப் பாதித்து, புண்ணை ஏற்படுத்திவிடும். காலை, மதியம், மாலை நேரத்தில் அமில சுரப்பு அதிகமாக இருக்கும்.

இந்த நேரத்தில் உணவைத் தவிர்க்காமல், சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வது வயிற்றுப் புண்ணுக்கான வாய்ப்பைத் தவிர்க்கும். ஆஸ்பிரின், ப்ரூஃபின் உள்ளிட்ட வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வதும் வயிற்றுப் புண்களை ஏற்படுத்தலாம்.

இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் என்ற இருபாலரும் காலை உணவை தவிர்ப்பதன் மூலம் இந்த அல்சர் ஏற்படுகின்றது. அல்சர் என்றால் நமது வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புண்கள்.

காரணங்கள்

1: அதிக அளவில் டீ, காபி போன்றவற்றை நாம் குடிப்பதன் மூலமாகவும் அல்சர் வருகின்றது.

2: அதிக அளவில் காரத்தன்மை வாய்ந்த பொருட்களை உண்பதன் மூலமாகவும் அல்சர் ஏற்படுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

1: டீ காபி போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

2: ஐஸ்கிரீம் சாக்லேட் இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

3: உணவில் மிளகாய் மிளகு போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டாம்.

இவ்வாறு ஏற்படும் அல்சரை வீட்டில் இருந்தபடியே எளிமையாக குணப்படுத்தி விடலாம்.

தேவையான பொருட்கள்

தயிர்

இந்து உப்பு

சீரகம்

ஓமம்

பெருங்காயம்

செய்முறை

ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் தயிர் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு சீரகப்பொடி அதில் சேர்த்து கொள்ள வேண்டும்.

அதனை அடுத்து ஓமம் மற்றும் பெருங்காயம் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இவற்றுடன் இந்து உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு வேண்டும்.

இதை நீங்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் உங்கள் வயிறு புண் ஆறும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News