Join THAMIZHKADAL WhatsApp Groups
தண்ணீர் இல்லாமல் உடல் இயக்கம் சீராக நடைபெறாது. எனவேதான் எந்த மருத்துவரும் முதலில் போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள் என பரிந்துரைக்கின்றனர்.
தினமும் காலை தூங்கி எழுந்ததும் முதல் வேலையாக தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் என பரிந்துரைப்பதற்கும் இதுவே காரணம். அந்த வகையில் தண்ணீர் உடலில் அதிகரிக்கும் யூரிக் ஆசிட் அளவை குறைக்கவும் உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
யூரிக் ஆசிட் என்றால் என்ன..? யூரிக் ஆசிட் என்பது நாம் சாப்பிடும் சில உணவுகளில் உள்ள பியூரின்கள் உடையும்போது உருவாகும் கழிவாகும். இது சிறுநீர் வழியாக வெளியேறும் . ஆனால் சிறுநீரகம் சரியாக செயல்படாத போது அல்லது உடலால் யூரிக் ஆசிடை வெளியேற்ற முடியாத போது அது உடலிலேயே தங்கிவிடும். அவ்வாறு தங்கி யூரிக் ஆசிட் அளவு அதிகரித்து பல்வேறு வகையான பாதிப்புகளை உண்டாக்கும். இதை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்தால் எளிதில் குறைத்துவிடலாம். அதில் ஒரு வழிதான் தண்ணீர். தண்ணீர் எப்படி யூரிக் ஆசிட் அளவை குறைக்கும் என்பதை பார்க்கலாம்.
டாக்டர். சுச்சின் பஜாஜ், (உஜாலா சிக்னஸ் குழும மருத்துவமனை நிறுவனர் மற்றும் இயக்குனர் ) TOI இணையத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில் " தண்ணீர் அதிகமாக குடிக்கும்போது யூரிக் ஆசிட் தண்ணீரில் கலந்து சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். எனவே நாம் எந்த அளவு தண்ணீர் குடித்து சிறுநீர் கழிக்கிறோமோ அந்த அளவுக்கு யூரிக் ஆசிட் அளவை குறைக்கலாம். ஆனால் இந்த செயல்முறை சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். இருப்பினும் நீங்கள் எப்போதும் நீரேற்றத்துடன் இருப்பது யூரிக் ஆசிட் தேக்கத்தை கட்டுபடுத்த முடியும். தீவிர நிலையிலிருந்து விலகியிருக்கலாம்" என கூறுகிறார்.
உடல் பருமன் யூரிக் ஆசிடிற்கு காரணம் : உடல் பருமனே பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு காரணமாக உருவெடுத்து வருகிறது. அந்த வகையில் யூரிக் ஆசிட் அதிகரிப்புக்கு உடல் பருமனும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. தண்ணீர் குடிப்பது யூரிக் ஆசிட் அளவை குறைப்பது மட்டுமன்றி உடல் பருமனையும் குறைத்து ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது.
உடல் பாகங்களை பராமரிக்கலாம் : நீங்கள் சர்க்கரை நிறைந்த பானங்களை தவிர்த்துவிட்டு தண்ணீரை அதிகமாக குடிக்கிறீர்கள் எனில் கலோரி அளவை குறைக்கலாம். அதனால் உடல் எடையையும் பராமரிக்கலாம். அதோடு அதிகமாக தன்ணீர் குடிப்பது குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. செரிமானம் சிறப்பாக இருக்கும். கல்லீரல் சுத்திகரிப்பு நடைபெறும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். சருமம் ஆரோக்கியம் மேம்படும்.
சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம் : பல ஆய்வுகள் அதிகமாக தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்கலாம் என்கிறது. கல் உருவாக முக்கிய காரணம் அதிக யூரிக் ஆசிட் அளவுதான். எனவே போதுமான அளவு தண்ணீர் குடித்து வந்தால் சிறுநீர் வழியாக கலந்து வெளியேறிவிடும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் ? ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். குறைந்தது 8 கிளாஸாவது குடித்து வந்தால் அது உடலின் ஒட்டுமொத்து ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
No comments:
Post a Comment