காஃபி குடிப்பது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
காஃபியில் அதிகமுள்ள காஃபினால் புத்துணர்ச்சி கூடும், நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் காஃபி அதிகம் குடிப்பது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும், ஆயுளைக் குறைக்கும் என்று எதிர்மறையாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் காஃபி குடிப்பதால் சருமத்திற்கு பிரச்னைகளை ஏற்படுத்துவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. காஃபி குடிப்பதை சரும பிரச்னைகளில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.
குழந்தைகளுக்கு இந்த 10 உணவுகளைக் கொடுக்காதீர்கள்!! காஃபி குடிப்பதை நிறுத்தினால்...
♦ காஃபி ஒரு டையூரிடிக். அது சிறுநீரை அதிகம் வெளியேற்றும், இதனால் உடல் நீரிழப்பு ஏற்படும்.
சருமத்தை வறண்டு போகச் செய்யும். எனவே, காஃபியை நிறுத்தினால் உடலில் இருக்கும் நீர்ச்சத்து சரும ஆரோக்கியத்திற்கு உதவும்.
♦ காஃபி குடிப்பதை நிறுத்தினால் சருமம் சிவந்து போதலைத் தடுக்க முடியும்.
♦ கண்களில் கருவளையங்களைக் குறைக்கும், தூக்கம் மேம்படும்.
♦ சருமத்தில் முகப்பருக்களைக் குறைக்கும்.
♦ இளமைத் தோற்றத்தை தக்க வைக்கும். எனவே இளமையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காஃபி குடிப்பதை விட்டுவிடலாம்.
♦ சருமத்தில் அரிப்பு மற்றும் ஒவ்வாமையைத் தடுக்கும்.
♦ சருமத்தில் ஏற்படும் எண்ணெய் உருவாக்கத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
♦ ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
♦ சருமத்தில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து சருமம் பளபளக்கும். | இந்தியர்கள் ஊட்டச்சத்து குறைவான உணவையே உண்கின்றனர்: ஆய்வில் சுவாரசியத் தகவல்கள்!
No comments:
Post a Comment