Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய பாரம்பரிய உணவு வகைகள் வேகவைத்த பருப்பு சேராமல் முழுமைப் பெறாது. சாம்பார், கூட்டு, பொரியல், கீரை என பலவற்றில் பருப்பு இடம்பெறும்.
சைவ உணவு உண்பவர்களுக்கு புரதத்தின் முக்கிய ஆதாரமாக பருப்பே உள்ளது. சிறந்த பருப்பு வகைகளும் அதன் சத்துக்களும் இங்கே.பச்சைப்பருப்பு பாசிப்பருப்பு அல்லது பச்சைப் பருப்பு தென்னிந்திய உணவுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகைகளில் ஒன்று. இதில் மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம், துத்தநாகம், ஃபோலேட் வைட்டமின்கள் மற்றும் புரதம், நார்சத்து நிரம்பியுள்ளது. எளிதில் ஜீரணம் ஆகும்.
கொழுப்பு குறைந்தது. ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தக் கூடியது. உளுந்தப் பருப்பு உளுந்தப் பருப்பில் முழு கறுப்பு உளுந்து மற்றும் வெள்ளை உளுந்து என இரு வகை உள்ளது. விலை வேறுபடும்.
கறுப்பு உளுந்தை தோல் நீக்கி தான் பயன்படுத்த முடியும். நம்மூர் இட்லி, தோசை, வடையின் சுவைக்கும், சத்துக்கும் உளுந்தப் பருப்பு தான் காரணம். தால் மக்கானா எனும் பிரபல டிஷ்ஷில் உளுந்து தான் மூலப்பொருள்.இது புரதம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றை குவித்து வைத்துள்ளது. கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இருப்பதால் செரிமானம் எளிதாகும்.
எலும்புகளை பலப்படுத்தக் கூடியது. தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்கும் உதவும். உளுந்தை உடைத்து கஞ்சியாகவும் பருகலாம். சிறுவர், சிறுமிகளுக்கு ஏற்றது.துவரம் பருப்பு சமையற் கட்டிற்கு புதிதாக நுழையும் லிட்டில் பிரின்சஸ், பிரின்ஸ்களுக்கு முதலில் வரும் குழப்பமே துவரம் பருப்பு எது, கள்ளப்பருப்பு எது என்பது தான்.
கள்ளப்பருப்பு தடிமான இருக்கும். துவரை மெலிதாக பொட்டு போன்று இருக்கும். இது புரதம், பொட்டாசியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியது. ஃபோலிக் அமிலத்தின் சிறந்த ஆதாரமாக துவரை இருப்பதால், நரம்புக் குழாய் பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவும்.
வறுகடலை அல்லது பொட்டுக் கடலை பஜ்ஜி, சூப், சாலட், பொரியல், சட்னி, குருமாவில் பயன்படுத்தப்படும் இந்த வறுகடலை ஊட்டச்சத்து நிரந்தவை. ஸ்நாக் ஆக கூட இதனை கொறிக்கலாம். இதில் புரதம், ஃபோலேட், துத்தநாக கால்சியம் மற்றும் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. நார்ச்சத்து குளுக்கோஸ் அளவை சீராக்க உதவுகிறது. எலும்பு வளர்ச்சியை ஊக்குவித்து, எலும்பை பலப்படுத்துகிறது.
No comments:
Post a Comment