Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 4, 2023

தமிழகத்தில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு – அரசு அறிவிப்பு!

தமிழக அங்கன்வாடிகளில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

பதவி உயர்வு:

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியம், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பதவி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதாவது தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வரும் நபர்களுக்கு பதவி உயர்வு வழங்க சமூக நலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சத்துணவு அமைப்பாளராக பணி புரிந்தவர்கள் பதிவுரு எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தினை பெற்று அதனை முறையாக பூர்த்தி செய்து சமூக நலத்துறை ஆணையரகத்திற்கு 10 . 8 2023 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News