Sunday, August 6, 2023

அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாக இதை ட்ரை பண்ணி பாருங்க..!

சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட, மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாகச் சரிசெய்யக்கூடிய மூலிகைகள் உண்டு.

அப்படி ஓர் அற்புதமான மூலிகைக் கீரைதான் 'கீழாநெல்லி'.இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு.

1)அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாக
கீழாநெல்லி செடிகளை சமூலமாக ஒரு கைப்பிடி எடுத்து நூறு மில்லி கொதிக்கும் நீரில் போட்டுக் காய்ச்சி ஐம்பது மில்லி தீநீராக்கி காலை மாலை என நாள்தோறும் இரண்டு வேளைகள் இளம் சூட்டில் குடித்து வர டெங்கு காய்ச்சல் பன்றி காய்ச்சல் மஞ்சள் காமாலைக் காய்ச்சல் போன்ற அனைத்துக் காய்ச்சல்களும் குணமாகும்

2)தோல் வியாதிகள் புண்கள் அரிப்பு
கீழா நெல்லி செடிகள் ஒரு கைப்பிடி எடுத்து அரைத்து சாறு எடுத்து கல் உப்பு சேர்த்துக் கலந்து மேற்பூச்சாகப் போட்டு வர தோல் வியாதிகள் புண்கள் அரிப்பு குணமாகும்

3)ஆறாத புண்கள் ஆற
தேங்காய் எண்ணையில் கீழாநெல்லி அரைத்த விழுது போட்டுக் காய்ச்சி தைலம் ஆக்கி இறக்கி வடிகட்டி ஆறவைத்து வெட்டுக் காயம் நீரிழிவு நோயினால் ஏற்படும் புண்கள் வெரிகோஸ் வெயின் என்னும் நரம்பு சுருட்டல் நோய்களால் வரும் புண்கள் ஆறும்

4)வெட்டுக் காயங்கள் ஆற
கீழாநெல்லியை சிதைத்து வெட்டுக்காயங்களில் வைத்துக் கட்ட வெட்டுக் காயங்கள் ஆறும்

5)மஞ்சள் காமாலை

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

6)சர்க்கரை நோய்

உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.

7)தலைவலி

நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News