Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 5, 2023

ஆவணி முதல் வக்ரமடையும் குரு.. அதிர்ஷ்டமழையில் நனைவது யார்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
குருபகவான் சுப கிரகம். ராகு உடன் மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் 04ஆம் தேதி முதல் வக்ரகதியில் பயணம் செய்வார்.

குருவின் வக்ர சஞ்சாரத்தினால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

குரு வக்ரமடைவது ஏன்: நவகிரகங்கள் அனைத்தும் தங்கள் சுற்றுப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவை சில நேரங்களில் பின்னோக்கியும் செல்லும். ஜோதிட ரீதியாக கிரகங்கள் பின்னோக்கி செல்லும் காலங்களை வக்ர காலங்கள் என்கிறோம். நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள். குரு பகவான் மேஷ ராசியில் பரணி, அஸ்வினி நட்சத்திரங்களில் வக்ரமடைவார். டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்யும் குருவின் இந்த பயணத்தினால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் ஏற்படும் என்று பார்க்கலாம்.

மேஷம்: குரு பகவான் உங்களுடைய ஜென்ம ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். உங்களின் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். புதிய பதவிகள் தேடி வரும். செப்டம்பர் 4 முதல் குரு பகவான் வக்கிரமாக செல்லும் காலத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும். வீட்டிலோ அலுவலகத்திலோ வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

ரிஷபம்: குருபகவான் ராகு உடன் விரைய ராசியில் சஞ்சரிக்கிறார். புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.. கடன் பிரச்சினைகள் உங்களுக்கு தொல்லையை கொடுக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எடுத்த காரியத்தை முடிக்க போராட வேண்டியிருக்கும். வேலையில் கவனமாக இருங்க. கர்ப்பிணி பெண்கள் கவனம் தேவை. மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை சாப்பிடாதீங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமும் எச்சரிக்கையும் தேவை.

மிதுனம்: லாப ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்யும் குரு உங்களுக்கு லாபத்தை கொடுப்பார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். உறவினர்கள் மூலம் மறைமுக நெருக்கடிகள் வரும். பண நெருக்கடி வந்து நீங்கும். வீண் செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

கடகம்: தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் குரு பகவான் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். செப்டம்பர் 4 முதல் குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும். தொலைந்து போன பணம், நகை ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் நலமாக இருக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி கொடுப்பீர்கள்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News