Join THAMIZHKADAL WhatsApp Groups
அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படும், கட்டட அமைப்பியல் படிப்புக்கான பி.ஆர்க்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
மொத்தம், 37 பி.ஆர்க்., கல்லுாரிகளில், 1,467 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். விண்ணப்பித்த, 2,485 மாணவர்களில், அரசு பள்ளி மாணவர்கள், 30 பேர் உட்பட, 1,400 பேர் மட்டுமே கவுன்சிலிங்குக்கு தகுதி பெற்றுஉள்ளனர்;
தகுதியின்றி, 1,085 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.இவர்களில் இருவர், நாட்டா என்ற தேசிய ஆர்கிடெக்சர் திறன் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்; 1,083 பேர் நாட்டா தேர்வை எழுதாதவர்கள்.
தரவரிசை பட்டியலில் குறைகள் மற்றும் ஆட்சேபம் உள்ளவர்கள், இன்று முதல், 16ம் தேதிக்குள் கவுன்சிலிங் குழுவை, கவுன்சிலிங் உதவி மையங்கள் வழியே தொடர்பு கொள்ளலாம். விபரங்களை, https://barch.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment